திருவாரூரில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு


திருவாரூரில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 3:49 PM GMT (Updated: 2018-11-22T21:19:37+05:30)

திருவாரூரில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் 6 நாட்கள் ஆகியும், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் மாணவர்களின் புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூரில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், குடவாசல், வலங்கைமான், நன்னிலம், கொரடாச்சேரியில் முகாம் இருந்தால் நாளை விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story