ஓசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் லாரி டிரைவருக்கு வலைவீச்சு
ஓசூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அந்திவாடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 30). லாரி டிரைவர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மஞ்சுநாத், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மஞ்சுநாத்தை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story