திருச்செந்தூர்-காயல்பட்டினத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருச்செந்தூர்-காயல்பட்டினத்தில் இருந்து நேற்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருச்செந்தூர்,
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருச்செந்தூர்-காயல்பட்டினத்தில் இருந்து நேற்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருச்செந்தூர்
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், திருச்செந்தூரில் வணிகர்கள், பொதுமக்களிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், பாய், போர்வை, பால் பவுடர், மருந்துகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை நேற்று திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து லாரியில் ஏற்றி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
தாசில்தார் தில்லைப்பாண்டி கொடி அசைத்து லாரியை வழியனுப்பி வைத்தார். துணை தாசில்தார் கோமதிசங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர். தூத்துக்குடியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயல்பட்டினம்
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், காயல்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை நேற்று லோடு ஆட்டோவில் ஏற்றி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story