வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் நெல்லையில் 10-ந் தேதி நடக்கிறது


வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் நெல்லையில் 10-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 22 Nov 2018 9:30 PM GMT (Updated: 22 Nov 2018 7:23 PM GMT)

நெல்லையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது என்று நெல்லை வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளர் வீரேஷ் தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது என்று நெல்லை வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளர் வீரேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-

மனு அனுப்பலாம்

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) ஆணையாளர் சனத்குமார் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை நெல்லை என்.ஜி.ஓ. ‘பி’ காலனியில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மனுவின் மீது “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்” மற்றும் மனுதாரர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வருகிற 30-ந் தேதிக்குள் இந்த அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

குறைதீர்க்கும் கூட்டம்

அதை தொடர்ந்து வருகிற 10-ந் தேதி காலை 10 மணிக்கு வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கும், பிற்பகல் 3 மணிக்கு தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 மணிக்கு வருங்கால வைப்பு நிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில் மனு அனுப்பியவர்கள் கலந்து கொண்டு மண்டல ஆணையாளரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Next Story