நெல்லை மாநகராட்சி சார்பில் சொத்துவரி, குடிநீர் இணைப்பு அனுமதி ஆணைகள் வழங்கும் சிறப்பு முகாம் 26-ந் தேதி முதல் நடக்கிறது
நெல்லை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு அனுமதி உள்ளிட்ட ஆணைகள் வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு அனுமதி உள்ளிட்ட ஆணைகள் வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
சிறப்பு முகாம்கள்
நெல்லை மாநகராட்சி பகுதியில் தச்சநல்லூர், நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பொது மக்களிடம் இருந்து பெறப்படும் சொத்து வரி, பெயர் மாற்றம் காலி மனை வரி விதிப்பு, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு அனுமதி, கட்டிட வரைபட அனுமதி போன்ற கோப்புகளுக்கு ஆணைகள் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) மேலப்பாளையம் மண்டல அலுவலகத்திலும், 28-ந் தேதி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்திலும், 29-ந் தேதி நெல்லை மண்டல அலுவலகத்திலும், 30-ந் தேதி தச்சநல்லூர் மண்டல அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்கள் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி நிலுவை மற்றும் நடப்பு விண்ணப்பங்கள் மீதான ஆணையை பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வரி செலுத்தலாம்
சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மற்றும் இதர வரிகளையும் செலுத்திட ஏதுவாக சிறப்பு வரி வசூல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story