கல்லடை ஊராட்சியில் காய்ச்சலை தடுக்க கொசு ஒழிப்பு பணி தீவிரம்
தோகைமலை அருகே கல்லடை ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்க கொசு ஒழிப்பு பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது.
தோகைமலை,
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கல்லடை ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று இந்த ஊராட்சிகளில் உள்ள கீழவெளியூர், பாரதிநகர், காமராஜர்நகர், மதுராநகர், இந்திராநகர் உள்பட பல்வேறு குடியிருப்பு, கோவில்கள், அரசு பள்ளிகள் மற்றும் கடைவீதிகளில் பகுதிகளில் கொசுக்களை கட்டுப் படுத்துவதற்காக நவீன எந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
மேலும் குடியிருப்பு பகுதிகளின் அருகில் பிளாஸ்டிக் கப்புகள், ஆட்டுக்கல், டயர், பாட்டில்கள் போன்ற பயன் பாடில்லாத பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீர், குப்பைகள், சாக்கடைகள் ஆகியவைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சி) ராணி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா, சுகார ஆய்வாளர் மகேஷ்வரன், ஊராட்சி செயலாளர் கலியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story