பரவனாற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க அரிவாள் மூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் - விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில் கலெக்டர் தகவல்
பரவனாற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க அரிவாள் மூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில் கலெக்டர் அன்பு செல்வன் கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்பு செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
சிவசரவணன்(பரங்கிப்பேட்டை):-அரியகோஷ்டி வாய்க்காலில் 30 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து பணி செய்துள்ளனர். ஒருவர் அந்த வாய்க்காலில் ஒரு ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு, அதனை வைத்து ஆதிவராகநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடனும் வாங்கி உள்ளார்.
கணேசன்(பரங்கிப்பேட்டை):- கீழ்அனுவம்பட்டுக்கும், கோவிலாம்பூண்டிக்கும் இடையே 51 லட்சம் ரூபாய் செலவில் தார் ரோடு போட்டுள்ளனர். ஆனால் 15 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் பல இடங்களில் ரோடு பெயர்ந்து விட்டது. 2016-17-ம் நிதியாண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்காத விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. பயிர்காப்பீடுக்கு பிரிமீயத்தொகை செலுத்தியதற்கான ரசீதை கொடுங்கள், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீட்டை வாங்கிக்கொள்கிறோம்.
மூர்த்தி:-பழையகொள்ளிடக்கரையோரம் உள்ள தவர்த்தான்பட்டில் 300 மீட்டர் தூரத்துக்கு ரோடு போட ஜல்லி கொட்டுவதாக அதிகாரிகள் கூறி ஒரு வாரம் ஆகிறது, இன்னும் ஜல்லி போடவில்லை. எனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 29-ந்தேதி சாலைமறியல் போராட்டம் நடத்த உள்ளோம். பழைய கொள்ளிடக்கரையோர கிராமங்களில் முதலை தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு முழுவதும் கிராம மக்கள் விழித்திருந்து காவல்காக்கின்றனர். முதலைகளை பிடித்து சிதம்பரம் வக்காரமாரி குளத்தில் விட வேண்டும்.
முருகானந்தம்:-சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்த கரும்புகளை வெளிஆலைக்கு கொண்டு செல்வதை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் யூரியாவை தண்ணீரில் போட்டால் மிதக்கிறது, பயிரும் ஒருவாரத்தில் வெளுத்து போகிறது.
கூட்டுறவு சர்க்கரை ஆலை தனிஅதிகாரி:-எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகள் வெளி ஆலைக்கு செல்வதை தடுக்க சோதனைச்சாவடி அமைக்கப்படும். அதோடு வெளி ஆலைக்கு கரும்பை கொண்டு செல்கிறவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிஆலைகளில் பதிவு செய்த கரும்புகளை விவசாயிகள் விருப்பப்பட்டால் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொடுக்கலாம். விருப்பப்பட்டவர்கள் மனு கொடுத்தால் அரசிடம் அனுமதி பெற்று கொள்முதல் செய்வோம். கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் அரசு நிர்ணயித்த விலையையும் கொடுப்போம்.
வேதகணேசன்:-மாட்டு வண்டிக்காரர்கள் ஒரு யூனிட் மணலை 125 ரூபாய்க்கு வாங்கி வந்து 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் இவ்வளவு தொகைக்கு மணல் வாங்க வேண்டுமா? குறைந்த பட்சம் அரசு மானிய திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்காவது நியாயமான விலையில் மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோ கடனுக்கு மானியத்துக்கும் சேர்த்து வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன.
கலெக்டர்:-எந்த வங்கியிலாவது அப்படி தவறு நடந்து இருந்தால் தெரிவியுங்கள், அந்த வட்டித்தொகையை திருப்பிக்கொடுக்க அறிவுறுத்துகிறேன்.
தமிழ்வளவன்:-தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு 2 ஆண்டுகளாக தங்கம் வழங்க வில்லை.
கலெக்டர்:-3500 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்க அனுமதி வந்துள்ளது, விரைவில் வழங்கப்படும்.
தமிழ்வளவன்:-நடுபரவனாறு முதல் பெரியபட்டு ஐந்துகண்மூக்கு பாலம் வரை தூர்வாரினால் பூவாலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளபாதிப்பில் இருந்து தப்பும்.
கலெக்டர்:-பரவனாறு பகுதியில் வெள்ளபாதிப்பை தடுப்பதற்காக அரிவாள்மூக்கு திட்டம் விரைவில் வரப்போகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த 35 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்காக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வருவாய் நிர்வாக ஆணையரும் நேரில் பார்த்து சென்று உள்ளார். இத்திட்டத்துக்கு தேவையான நிலமும் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை இணைஇயக்குனர் அண்ணாதுரை, முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, கிராம பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் ஆனந்த், வேளாண்மை துணைஇயக்குனர் ஜெயகுமார், உதவி இயக்குனர் பூவராகன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story