மெரினா கடற்கரையில் ஒழுங்குபடுத்தப்பட்ட கடைகளை போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்
மெரினா கடற்கரையில் ஒழுங்குபடுத்தப்பட்ட கடைகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்.
அடையாறு,
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் பல கடைகள் கடற்கரையின் உட்புறத்திலும், சர்வீஸ் சாலையிலும் ஆங்காங்கே ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.
இது கடற்கரை அழகை கெடுப்பதுடன், கடற்கரை முழுவதும் குப்பை கூளமாக உள்ளதாலும், விடுமுறை தினங் களில் கடற்கரை சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சுமார் 1,900 கடைகளையும் இரு வரிசைகளாக கடற்கரை சர்வீஸ் சாலையை ஒட்டி மணல் பகுதியில் சீரமைக்கும் பணி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் கடந்த 20-ந் தேதி தொடங்கியது.
இந்த கடைகளை வரிசைப்படுத்தும் பணியில் ஏராளமான மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன், கிரேன் எந்திரங்கள் உதவியுடன் ஈடுபட்டு உள்ளனர்.
பெரும்பான்மையான கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், கலங்கரை விளக்கம் அருகே ஒழுங்குபடுத்தப்பட்ட கடைகளை நேற்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.
போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் அன்பு (கிழக்கு), மகேஷ்குமார் அகர்வால் (வடக்கு), மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன், உதவி கமிஷனர்கள் உக்கிரபாண்டியன், சுதர்சன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதி துணை கமிஷனர் லலிதா, வட்டார துணை கமிஷனர் (மத்திய) சுபோத்குமார், வட்டார துணை கமிஷனர் (வடக்கு) திவ்யதர்ஷினி, 9-வது மண்டல அலுவலர் அனிதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் வந்தனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகிலேயே 2-வது நீண்ட கடற்கரையான சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த கடைகளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். இந்த முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல ஒரு அனுபவத்தை கொடுக்கக்கூடிய கடற்கரையாக மெரினா விளங்க வேண்டும் என்பதற் காக இதை செய்துள்ளோம்.
மெரினா கடற்கரையில் இரவில் படுத்துறங்கிய நடுக்குப்பம், நொச்சி குப்பத்தை சேர்ந்த மக்களை ரோந்து போலீசார் தாக்கியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வரம்பு மீறல் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மெரினா கடற்கரை வியாபாரிகளிடம் ரவுடிகள் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வது குறித்து புகார் தெரிவித்தால் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் குளிக்கும்போது அலைகளில் சிக்கி உயிர்இழப்பு ஏற்படுவதை தடுக்கும்பொருட்டு, கடற்கரையில் புதிதாக கண்காணிப்பு கோபுரங்கள், எச்சரிக்கை பலகைகள் வைத்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறும்போது, “சென்னை மாநகராட்சி சார்பில் போலீசாரின் முழு ஒத்துழைப்புடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு வியாபாரிகள் மூலம் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காகவும், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வியாபாரம் நடப்பதுடன், கடற்கரையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் முதல்-அமைச்சர் உத்தரவுபடி இந்த பணி நடக்கிறது. இதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது” என்றார்.

Related Tags :
Next Story