மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் - திருமாவளவன் பேட்டி


மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் - திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2018 4:45 AM IST (Updated: 26 Nov 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுத்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று சிவகாசியில் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

சிவகாசி,

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எங்களை நண்பர்கள் என்று கூறி இருக்கிறார். இதில் தவறு ஒன்றும் இல்லை. தி.மு.க.வுடன் கடந்த 2 ஆண்டுகளாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தோழமையாக இருக்கிறது. இது கூட்டணியாக மாற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இ ருக்கிறார்கள்.

தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு ஒரு நல்ல முடிவை எ டுக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது பட்டாசால் மட்டும் தான் என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கக்கூடாது. பல வகைகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. மீத்தேன் திட்டம், சாயப்பட்டறை, வண்டி, வாகனங்களால் கூட சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தியா முழுவதுக்கும் பட்டாசுகளை சப்ளை செய்யும் சிவகாசிக்கு ஒரு பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த தொழில் நசிந்து போகாத வகையில், தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் கொள்கை முடிவுகளை எடுத்து இந்த தொழிலை பாது காக்க வேண்டும். பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், தொழிலாள ர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேதி அறிவித்த பின்னர் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்ப டும். பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்கக்கோரி மாநில, மத்திய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்து பேசி போராட்டம் அறிவிக்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக செல்ல உள்ளேன். விடுதலைச்சிறுத் தைகள் கட்சியின் சார்பில் முதல்–அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அளி த்து இருக்கிறோம். தமிழக அரசு கேட்ட உதவிகளை மறுக்காமல் மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story