ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை கொல்ல முயற்சி: வியாபாரி கைது
ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை கொலை செய்ய முயன்ற வியாபாரி கைது செய்யப்பட் டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போத்தனூர்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலோடு பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 52). இவர் பொள்ளாச்சியில் வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு, கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது அங்கிருந்த 18 வயது இளம்பெண் மீது முகமது சாதிக்கிற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் அவர், இளம்பெண்ணை கேரளாவில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறினார். இதை நம்பிய இளம்பெண் நேற்று அதிகாலை முகமது சாதிக்குடன் ஸ்கூட்டரில் கேரளா புறப்பட்டார்.
கே.ஜி. சாவடியை அடுத்த ரொட்டிக்கவுண்டன்புதூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது மொபட்டை நிறுத்திய முகமது சாதிக், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டார். உடனே ஆத்திரம் அடைந்த முகமது சாதிக் வயரை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றார். அப்போது அந்த இளம்பெண்ணின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் முகமது சாதிக் ஸ்கூட்டரில் தப்பி சென்றார்.
கழுத்தை இறுக்கியதால் மயக்கம் அடைந்த இளம்பெண்ணை பொதுமக்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வயரால் இறுக்கியதால் அந்த பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
இது குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வியாபாரி முகமது சாதிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story