லால்குடி அருகே நிமோனியா காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி


லால்குடி அருகே நிமோனியா காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
x
தினத்தந்தி 26 Nov 2018 4:40 AM IST (Updated: 26 Nov 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே நிமோனியா காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். லாரி டிரைவர். இவருடைய மகள் லக்சிகா(வயது 7). இருங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் லக்சிகா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த செவ்வாய்க்கிழமை லக்சிகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு ரத்த பரிசோதனை செய்ததில் லக்சிகா நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லக்சிகா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தச்சன்குறிச்சியில் கடந்த வாரம் பெய்த மழையினால் கீழத்தெரு, தேர்முட்டித் தெரு, வடக்கு தெரு, கீழ மாரியம்மன் கோவில் தெரு, முஸ்லிம் தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இங்கு உற்பத்தியான கொசுக்கள் கடித்ததில்தான் லக்சிகா பலியானார் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story