கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: அ.ம.மு.க.வினர் அனுப்பி வைத்தனர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி,
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட பகுதி மக்களுக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கோமுகிமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, போர்வை, பாய், வேட்டி-சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை மினிலாரி மூலம் அனுப்பி வைத்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள், மதுசூதனன், ராஜேந்திரன், தங்கதுரை, மூர்த்தி, பாலாஜி, மாயாவேலாயுதம், நகர செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், ராம்குமார், மாரிக்கண்ணு, நம்பி, அன்பு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விக்கிரவாண்டி ஒன்றிய அ.ம.மு.க. சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் குமாரராஜா தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கீதா முருகானந்தம் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் வக்கீல் முருகன் வரவேற்றார்.
மாநில அமைப்பு செயலாளர் கணபதி கலந்து கொண்டு ரூ.2½ லட்சம் மதிப்பிலான அரிசி, பாய், துண்டு உள்ளிட்ட நிவாரண பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அனுப்பி வைத்தார்.
இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ஜோதி சத்யா, ஒன்றிய நிர்வாகிகள் அய்யனார், ரங்கநாதன், லோகதாஸ், சையத் இப்ராகீம் தமிழரசன், ஜான்சன், பாரதிதாசன், ஊராட்சி செயலாளர் பாபு புவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story