ஆம்பூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 தொழிலாளிகள் பரிதாப சாவு


ஆம்பூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 தொழிலாளிகள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 27 Nov 2018 3:30 AM IST (Updated: 26 Nov 2018 9:20 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.

ஆம்பூர், 

ஆம்பூர் அருகே கன்னடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சைனா (வயது 22), அப்பகுதியில் உள்ள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அய்யனூர் - வெள்ளக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை டாக்டர் பரிசோதித்தபோது சைனா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டம், பீர்கன்கரனை பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் வசந்தகோவிந்தன் (வயது 45), ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பகுதியில் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த கார் வசந்தகோவிந்தன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story