பழவந்தாங்கலில் பெண் துப்புரவு தொழிலாளி பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்


பழவந்தாங்கலில் பெண் துப்புரவு தொழிலாளி பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:30 AM IST (Updated: 28 Nov 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கேக் வாங்கி வைத்து தயாராக காத்திருந்தனர்.

ஆலந்தூர்,

பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அனுசியா(வயது 67) என்பவர் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று அனுசியாவுக்கு பிறந்தநாள் ஆகும். நேற்று வழக்கம்போல் துப்புரவு பணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த அனுசியாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அனுசியா பிறந்த நாளை முன்கூட்டியே அறிந்திருந்த பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கேக் வாங்கி வைத்து தயாராக காத்திருந்தனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த தொழிலாளி அனுசியா இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஜோஸ்லின் மேரி மற்றும் போலீசார் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு புதிய சேலையை போலீசார் பரிசாக வழங்கினார்கள். தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய போலீசாருக்கு அனுசியா நன்றி கூறினார். துப்புரவு தொழிலாளி பிறந்தநாளை கொண்டாடிய போலீசாரை தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story