மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. நிதிஉதவி
மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு, குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. நிதிஉதவி வழங்கினார்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி இந்துமதி(வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் மகன் ராஜதுரை(26). இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யும்போது மின்னல் தாக்கி காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், காயம் அடைந்த 2 பேரையும் நேரில் சந்தித்து தலா ரூ.25 ஆயிரம் நிதிஉதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் குணசீலன், குரும்மாபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, குன்னம் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் மதியழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story