அறந்தாங்கியில் குடிநீர், மின்சாரம் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் மறியல்


அறந்தாங்கியில் குடிநீர், மின்சாரம் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:45 AM IST (Updated: 28 Nov 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் குடிநீர், மின்சாரம் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

கஜா புயலால் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமத்திலும் உள்ள மரங்கள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் சேதம் அடைந்்தன. இதனால் மின்சாரம் வழங்குவதில் தடை ஏற்பட்டது. குடிநீர், வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மின்சாரத்துறை பணியாளர்கள் 10 பேர் கொண்ட குழுவாக பிரிந்து ஒவ்வொரு பகுதியாக நாள் தோறும் தீவிர சீரமைப்பு பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை ரோடு குரும்பூர் மேடில் உள்ள பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டும், புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதியில் வீடுகள், மரங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என்று கூறியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்சாரம், குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் எரிச்சி, பட்டுக்கோட்டை ரோடு எருக்கலக்கோட்டை ஆகிய 2 இடங்களிலும் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் மறியலி ல் ஈடுபட்டனர்.

Next Story