கஜா புயல் பாதித்த பகுதிக்கு ரூ.56.24 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்


கஜா புயல் பாதித்த பகுதிக்கு ரூ.56.24 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்
x

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று ரூ.56.24 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்.

நெல்லை, 

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று ரூ.56.24 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்.

நிவாரண பொருட்கள்

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரிசி, மசாலா பொருட்கள், ஆடைகள், திண்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.56 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் சேகரித்து அனுப்பிவைக்கப்பட்டது. இந்த பொருட்கள் 7 லாரிகளில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இருந்து நேற்று அனுப்பிவைக்கப்பட்டன. இதை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து அனுப்பிவைத்தார். இந்த நிவாரணப்பொருட்களுடன் அரசு ஊழியர்களும் சென்றனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பேரூராட்சி துறையின் மூலம் 50 டன் அரிசி, 2 டன் மளிகைப் பொருட்கள், 35 லிட்டர் எண்ணெய், 4 டன் பருப்பு வகைகள், 1 டன் மாவு வகைகள் மற்றும் 8 ஆயிரத்து 113 சோப்பு பல்பொடி குளியல் சாமான்கள், 2ஆயிரத்து 757 தீப்பெட்டிகள், 3ஆயிரத்து 589 மெழுகுவர்த்திகள், 2ஆயிரத்து 136 கொசு வர்த்திகள், 3ஆயிரத்து 143 துணி வகைகள், 1982 பெட் சீட்கள் மற்றும் பாய்கள், 14ஆயிரத்து 280 பிஸ்கட் பாக்கெட்டுகள், 540 நாப்கின்கள், 10 மிக்சிகள், 127 பாத்திரங்கள், 66 பள்ளி குழந்தைகளுக்கான உபகரணங்கள், 262 மருத்துவ உபகரணங்கள் உள்பட ரூ.43 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

லாரிகளில் அனுப்பி வைப்பு

மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மூலம் 6 டன் அரிசி, 2 டன் கோதுமை மாவு, 1.5 டன் மைதா மாவு, 3 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள், 100 கிலோ பாமாயில், 150 மசாலா பவுடர், 60 பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்பட ரூ.5 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் உணவு, மசாலா பொருட்கள் மற்றும் குளியல் சம்மந்தப்பட்ட பொருட்கள் அடங்கிய 900 பாக்கெட்டுகளும், 100 டவல்களும், 100 லுங்கிகளும், 345 சேலைகளும், 25 சுடிதார்களும், 15 பெட்சீட்கள் போன்ற உபகரணங்கள் ரூ.7 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும், ஆக மொத்தம் ரூ.56 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் 7 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் திருப்பதி, சிரஸ்தார் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story