நேரு கல்வி குழுமம் சார்பில்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்


நேரு கல்வி குழுமம் சார்பில்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 29 Nov 2018 3:45 AM IST (Updated: 29 Nov 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

நேரு கல்வி குழுமம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

கோவை, 

நேரு கல்வி குழுமம் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. இதன்படி 2 ஆயிரம் போர்வைகள், 5 ஆயிரம் கிலோ சேமியா மற்றும் ரவை, 2 மரம் வெட்டும் எந்திரம், 5 ஆயிரம் மசாலா பாக்கெட்டுகள், 25 ஆயிரம் நாப்கின்கள், 500 டார்ச் லைட்டுகள், 500 கிலோ பால் பவுடர், 2 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 25 கிலோ எடைகொண்ட 250 அரிசி மூட்டைகள், 2 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 200 கிலோ பருப்பு, 200 விளக்குகள், 5 ஆயிரம் மெழுகுவர்த்தி, 5 ஆயிரம் கொசு மருந்து காயில்கள், 1000 பாக்கெட் உப்பு.

2000 குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்புகள், 1000 டூத் பேஸ்டுகள் மற்றும் 2 ஆயிரம் தீப்பெட்டிகள் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி வாகனம் மூலம் அறந்தாங்கி, தஞ்சை, திருவாரூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் வக்கீல் பி.கிருஷ்ணதாஸ், செயலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் பி.கிருஷ்ணகுமார் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் அ.முரளிதரன் மற்றும் விளையாட்டு ஆசிரியர் செந்தில் ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story