புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள் அ.தி.மு.க. சார்பில் அனுப்பப்பட்டது
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு உதவிடும்பொருட்டு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதற்கட்டமாக ரூ.14 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.
பெரம்பலூர்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு உதவிடும்பொருட்டு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதற்கட்டமாக ரூ.14 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. மேலும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன், கஜா புயல் நிவாரண நிதியாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தற்போது 2-ம் கட்டமாக அ.தி.மு.க. சார்பில் அரிசி, குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், போர்வை, துணிமணிகள் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து லாரிகள் மூலம் திருவாரூர் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டது. நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சியில் மருதராஜா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன்(குன்னம்), தமிழ்ச்செல்வன்(பெரம்பலூர்), அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கர்ணன்(ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை) உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல, பெரம்பலூர் நகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட அவ்வையார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் ரூ.51 ஆயிரத்து 64 நிதி திரட்டினர். அதனை அந்தப்பகுதி மக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியிடம் வழங்கினர்.

Related Tags :
Next Story