அரியலூர் மாவட்டத்தில் 4,613 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


அரியலூர் மாவட்டத்தில் 4,613 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x
தினத்தந்தி 28 Nov 2018 10:30 PM GMT (Updated: 28 Nov 2018 8:41 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 4,613 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர்,

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். விழாவிற்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மகிமைபுரம் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2,356 மாணவ, மாணவிகளுக்கும், அரியலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2,257 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 4,613 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, திருச்சி ஆவின் துணைத்தலைவர் தங்க.பிச்சைமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (பொறுப்பு) (உடையார்பாளையம்), செல்வராசு (அரியலூர்), வெற்றிச்செல்வி (செந்துறை), பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் சங்கர், முத்தையன், தலைமையாசிரியர்கள் சாமிதுரை, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story