பாம்பன் மீன்பிடி இறங்குதளத்தில் வாகனங்களுக்கு திடீர் கட்டணம் வசூல் - மீனவர்கள் போலீசில் புகார்
பாம்பன் மீன்பிடி இறங்கு தளத்துக்கு வரும் வாகனங்களிடம் திடீரென கட்டணம் வசூலித்த அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டு போலீசில் புகார் செய்துள்ளனர்.
ராமேசுவரம்,
பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் மீன் துறையினரால் கடந்த ஓராண்டுக்கு முன்பு மீன்பிடி இறங்குதளம் கட்டப்பட்டது. இதனை மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மீன்துறை ஆய்வாளர் கவுதம் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து மீன் ஏற்றிச்செல்லும் வாகனங்களிடம் ரூ.100, ரூ.200 என கட்டணம் வசூலித்து ரசீது வழங்கினர்.
இதுவரை இல்லாமல் திடீரென மீன்துறையினர் இவ்வாறு கட்டணம் வசூலித்ததால் மீனவர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட அவர்கள் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான மீனவர்கள் திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மீன்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் மீனவர்கள் இதுதொடர்பாக பாம்பன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் மீன்துறை அதிகாரிகள் மீன் ஏற்றிச்செல்ல வரும் வாகனங்களிடம் திடீரென கட்டணம் வசூலிப்பதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மீன்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டு வருடக்கணக்கில் ஆகிறது. அதனை பராமரிப்பதற்காக மீனவர்களுடன் சேர்ந்து ஒரு கமிட்டி அமைப்பதற்கு முயற்சி செய்தோம். அதற்கு யாரும் ஒத்துழைக்கவில்லை. எனவே கட்டணம் வசூலிக்க முற்பட்டோம். அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story