மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம் + "||" + Vaigunda Ekadasi Festival arrangements in Srirangam Renganath temple

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 8-ந் தேதி தொடங்கும் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.


டிசம்பர் 17-ந் தேதி மோகினி அலங்காரம், 18-ந் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. 24-ந் தேதி திருக்கைத்தல சேவை, 25-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 27-ந் தேதி தீர்த்தவாரி, 28-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரமபதவாசல் வழியாக, சந்திர புஷ்கரணி, தவிட்ரவாசல் வழியாக மணல்வெளிக்கு செல்லும் பகுதிகளில் தகர கூரைகள் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளன.

இதேபோல் வெள்ளை கோபுரம் அருகிலும் விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைகுண்ட ஏகாதசி விழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்பட்ட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மக திருவிழா: குதிரை சிலைக்கு காகித மாலைகள் குவிந்தன
பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவில், குதிரை சிலைக்கு காகித மாலைகளை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
2. திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.
3. புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நாளை தொடங்குகிறது
புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
4. தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி ஏப்ரல் 2-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடியேற்றம் ஏப்ரல் 2-ந்தேதி நடக்கிறது.
5. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15,16-ந் தேதிகளில் நடக்கிறது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15,16-ந் தேதிகளில் நடக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...