மெர்சி படுகொலையை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்


மெர்சி படுகொலையை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:15 AM IST (Updated: 29 Nov 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் மெர்சி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து குமாரபுரத்தில் அவருடைய உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபுரம்,

இளம்பெண் மெர்சி கொலையை கண்டித்து அவரது சொந்த ஊரான தக்கலை வலியவிளை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் நேற்று குமாரபுரம் சந்திப்பில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அப்போது, பெண்களுக்கு எதிராக தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்றும், படுகொலை செய்யப்பட்ட மெர்சியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கேட்டும், இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

இதில் தக்கலை வட்டார காங்கிரஸ் தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், திருவட்டார் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜாண்பிரைட், காந்திய மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ஜார்ஜ் பிலீஜின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார குழு உறுப்பினர் ஜோசப்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Next Story