டிசம்பர் 17-ந் தேதி முதல் 7 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்
உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக டிசம்பர் 17-ந் தேதி முதல் 7 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
ஈரோடு,
உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவருமான கொங்கு எம்.ராஜாமணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி, ஈரோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சென்னிமலை பொன்னுசாமி, தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திர ராசு, உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மு.ஈசன், ஈரோடு மாவட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் சி.வடிவேல் மற்றும் தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஈ.வி.கே.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதை தடுக்க போராட்டங்கள் நடத்துவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து கூட்டு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கொங்கு எம்.ராஜாமணி கூறியதாவது:-
தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் என 13 மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தினரும் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை செயல்படுத்த தொடங்கி உள்ளனர். மொத்தம் 12 திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் விவசாய நிலங்கள் வழியாக மின் கம்பிகள் செல்லும் வகையில் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
இது விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பற்றி அக்கறையின்றி சம்பந்தப்பட்ட துறையினர் அரசின் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையை கொண்டு விவசாயிகளை மிரட்டியும், அச்சுறுத்தியும் உயர்அழுத்த மின் கோபுர திட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். இந்த திட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளை கைது செய்யும் அவலமும் உள்ளது. விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகள் இணைந்து கூட்டு இயக்கம் தொடங்கி, 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.
உயர்அழுத்த மின் கோபுர திட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள், பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கை ஆகியவற்றை வலியுறுத்தி 220 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. 18 ஆர்ப்பாட்டங்களும் நடத்தி இருக்கிறோம். விவசாயிகள் கோரிக்கை மாநாடு ஈரோட்டில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தலைமையில் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதே நேரம் மீண்டும் விவசாயிகளை மிரட்டி, கோபுரம் அமைக்கும் பணிகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 13 மாவட்ட விவசாயிகளை உள்ளடக்கி கூட்டு இயக்கம் சார்பில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவித்து இருக்கிறோம்.
அதன்படி வருகிற டிசம்பர் மாதம் கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம், ஈரோடு மாவட்டம் மூலக்கரை, நாமக்கல் மாவட்டம் படைவீடு, சேலம் மாவட்டம் வாழப்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் கிளிப்பட்டு, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் என 7 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பரிசீலனையில் உள்ள 21 திட்டங்களையும் கைவிட வேண்டும். உயர் மின் அழுத்த கம்பிகளை புதைவட கம்பிகளாக தேசிய நெடுஞ்சாலைகள் ஓரமாக மண்ணில் புதைத்து கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் கொங்கு எம்.ராஜாமணி கூறினார்.

Related Tags :
Next Story