காரியாபட்டி பகுதியில் திருகல் நோயால் வெங்காய விளைச்சல் பாதிப்பு - விவசாயிகள் கவலை
காரியாபட்டி பகுதியில் திருகல் நோயால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், நரிக்குடி மற்றும் காரியாபட்டி யூனியன் பகுதிகளில் அதிக அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் காரியாபட்டி யூனியனுக்கு உட்பட்ட அரசகுளம், குரண்டி, திருவிருந்தாள்புரம், சீகனேந்தல், ஆவியூர், கல்லங்குளம், கொட்டங்குளம், புளியங்குளம், முஷ்டக்குறிச்சி, மாங்குளம் மற்றும் நரிக்குடி பகுதிகளில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வெங்காய செடிகள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த பருவத்தில் வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது வெங்காயம் பயிரிட்டு திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ள நிலையில் வெங்காய பயிர் பாதிப்படைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி மகாலிங்கம் கூறும்போது, எங்கள் பகுதியில் 500 ஏக்கருக்கும் மேல் வெங்காயம் பயிரிட்டுள்ளோம். காலநிலை மாற்றத்தால் வெங்காயம் முழுவதும் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையென்றால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
திருகல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து கோவிலாங்குளத்தில் உள்ள மண்டல ஆராய்ச்சி மைய பேராசிரியர் ராஜதுரை கூறியதாவது:-
திருகல் நோய்க்கான காரணி கொலிட்டோடிரைக்கம் கிளியோஸ்போரியாய்டஸ் என்ற பூஞ்சையாகும். ஆரம்பத்தில் இலைத்தாள்களில் வெளிர் மஞ்சள் நிறத்தில் நீரில் நனைந்த புள்ளிகளாக தென்பட்டு பின்னர் இப்புள்ளிகள் நீண்டு இலைப்பரப்பு முழுவதும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட இலைத்தாள்கள் பழுப்பு நிறமாகி சுருண்டும், திருகியும் காணப்படும்.
நோய் தாக்கிய வெங்காய பயிரின் வளர்ச்சி குன்றி விடும். வெங்காயத்தை நோய் தாக்குவதால் அது சிறுத்து, தண்டு பழுத்து விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெங்காயம் அறுவடைக்கு ஏற்றதாக இருக்காது. நோய் தாக்கிய வெங்காயத்தை சேமிக்கும்போது அழுகி காணப்படும். வெப்பம் மிதமாகவும், மண்ணின் ஈரப்பதம் அதிகமாகவும் இருந்தால் நோய் தாக்கம் அதிகமாக காணப்படும்.
இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு பயிர்க்கழிவுகளை அப்புறப்படுத்தி எரித்துவிட வேண்டும். சூடோமோனாஸ் கரைசலை வெங்காயப் பயிர் நட்ட 45 நாட்களில் தெளிப்பதனால் இந்த நோய் காற்றின் மூலம் பரவுவது தடுக்கப்பட்டு பயிர் காக்கப்படுகிறது. மேலும் திருகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு(பைட்டோலான்) மருந்தை தெளிப்பது அவசியம். பனி படர்ந்த நேரத்தில் மருந்தை தெளிக்காமல் காலை 7 மணிக்கு மேல் மருந்தை தெளிப்பதால் பயிர் மருந்தை உள்வாங்கி நல்ல பலனை தரும் என்றார்.

Related Tags :
Next Story