குவைத்தில் இருந்து விமானத்தில் ரூ.56 லட்சம் தங்கம் கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்


குவைத்தில் இருந்து விமானத்தில் ரூ.56 லட்சம் தங்கம் கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:25 AM IST (Updated: 29 Nov 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

குவைத்தில் இருந்து விமானத்தில் ரூ.56 லட்சம் தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது 2 பயணிகளின் உடைமைகளில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.56 லட்சம் ஆகும்.

பின்னர் பயணிகள் 2 பேரையும் பிடித்து சகார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்த முகமது சலீம் அப்துல் கரீம், காலித் அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது.

காலித் அப்துல் ரகுமான் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு தங்கம் கடத்திய வழக்கில் பிடிபட்டவர் என்பதும் தெரியவந்தது. தங்கம் கடத்தல் தொடர்பாக இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story