கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் மோட்டார் சைக்கிளை பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கூட்டாளியை தேடி வருகின்றனர்.
பிராட்வே,
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை காலனியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன்(வயது 32). இவர், கடந்த 21-ந்தேதி அதிகாலை பால் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். கொடுங்கையூர் ரிஸ்வான் சாலை, ஜம்புலிங்க சாலை சந்திப்பில் சென்ற போது அங்கிருந்த 2 பேர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி சந்தானகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்றார்.
அப்போது அதே பகுதியில் தண்ணீர் கேன்கள் போட வந்த செழியன் என்பவரையும் கத்தியால் கீறிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மாதவரம் பகுதியில் உள்ள ஒரு கடையை தீயிட்டு கொளுத்த வந்த மர்மநபர்கள், சந்தானகிருஷ்ணனை மிரட்டி மோட்டார்சைக்கிளை பறித்ததுடன், செழியனை கத்தியால் கீறிவிட்டு சென்றதும், மாதவரம் அருகே தகராறில் ஈடுபட்டபோது பொதுமக்கள் கூடியதால் அந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற கத்திக்குத்து தேவராஜ்(29) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்தான் தனது நண்பர் விக்கியுடன் சேர்ந்து சந்தானகிருஷ்ணனை மிரட்டி மோட்டார்சைக்கிளை பறித்ததும், செழியனை கத்தியால் வெட்டியதும் தெரிந்தது.
புளியந்தோப்பு மற்றும் பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலையங்களில் தேவராஜ் மீது கொலை வழக்குகள் இருப்பதும், திருமங்கலம் பகுதியில் நடைபெற்ற நகை கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கைதான தேவராஜை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரான விக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story