கோலார் தங்கவயல் முன்னாள் எம்.எல்.ஏ. மு.பக்தவச்சலம் மரணம்
கோலார் தங்கவயல் முன்னாள் எம்.எல்.ஏ. மு.பக்தவச்சலம் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்டம், கோலார் தங்கவயல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் நகரசபை தலைவருமான மு.பக்தவச்சலம் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. நேற்று மாலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவருடைய குடும்பத்தினர் சிகிச்சைக்காக கோலாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் மாரடைப்பால் அவருடைய உயிர் பிரிந்தது.
மு.பக்தவச்சலம் 3 முறை கோலார் தங்கவயல் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். கடந்த 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கோலார் தங்கவயலுக்கு வந்து மு.பக்தவச்சலத்திற்காக பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 முறை கோலார் தங்கவயல் நகரசபை தலைவராகவும், 3 முறை துணை தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்து, கவுன்சிலராக பணியாற்றி வந்தார். அவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மறைந்த மு.பக்தவச்சலம் உடலுக்கு, அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story