நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள் அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்


நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள்  அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 29 Nov 2018 5:50 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ரூ.25 லட்சம் நிவாரண பொருட்களை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நெல்லை, 

நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ரூ.25 லட்சம் நிவாரண பொருட்களை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நிவாரண பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அரிசி, பருப்பு, போர்வை, பாய், பால் பவுடர், கோதுமை, ரவை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் 2 லாரிகளில் ஏற்றி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நெல்லை சேவியர் காலனியில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அமைச்சர் அனுப்பி வைத்தார்

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சுகா கே.பரமசிவன் முன்னிலை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி நிவாரண பொருட்கள் லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், செயலாளர் இ.நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், பெரிய பெருமாள், ஆவின் துணைத்தலைவர் கணபதி, ஞானபுனிதா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சேர்மபாண்டி, ராஜேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துகுட்டி பாண்டியன், கண்டிகைபேரி ஜான்சன் மற்றும் ஒன்றிய, நகர பஞ்சாயத்து செயலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story