அரியலூரில் நாளை த.மா.கா. மாநாடு; ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்


அரியலூரில் நாளை த.மா.கா. மாநாடு; ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்
x
தினத்தந்தி 30 Nov 2018 4:00 AM IST (Updated: 30 Nov 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார் தலைமை தாங்கி பேசுகையில், த.மா.கா. 5-ம் ஆண்டு தொடக்க விழா மாநாடு நாளை (சனிக்கிழமை) மாலை 4 அளவில் அரியலூர்- திருச்சி புறவழிச்சாலையில் உள்ள வாணி மஹால் எதிரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் கோவை தங்கம், மாநில பொது செயலாளர்கள் சக்திவேல், விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர்கள் அசோகன், சீனிவாசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story