தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை அணைக்கரையில் அதிகபட்சமாக 55 மி.மீ. பதிவானது


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை அணைக்கரையில் அதிகபட்சமாக 55 மி.மீ. பதிவானது
x
தினத்தந்தி 30 Nov 2018 4:30 AM IST (Updated: 30 Nov 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அணைக்கரையில் அதிகபட்சமாக 5 மி.மீ. பதிவானது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கஜா புயலுக்குப்பின்னர் தமிழகத்தில் ஆங்காங்கே பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கும்பகோணம், திருவிடைமருதூர், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. தஞ்சையில் நேற்று காலை 8 மணி முதல் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையினால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

ஒரு சில பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. ஒரு சில பள்ளிகளில் சிறுவர், சிறுமிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. காலை 10 மணிக்குப்பின்னர் மழை இன்றி காணப்பட்டன. அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான தூறலுடனும் மழை காணப்பட்டது. அணைக்கரையில் அதிகபட்சமாக 55 மி.மீட்டர் மழை பதிவானது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தஞ்சை 7, வல்லம் 16, குருங்குளம் 17, திருவையாறு 19, பூதலூர் 5, திருக்காட்டுப்பள்ளி 8, கல்லணை 7, ஒரத்தநாடு 11, நெய்வாசல் தென்பாதி 15, வெட்டிக்காடு 23, கும்பகோணம் 35, பாபநாசம் 32, அய்யம்பேட்டை 36, திருவிடைமருதூர் 38, அணைக்கரை 55, மஞ்சளாறு 51, பட்டுக்கோட்டை 16, அதிராம்பட்டினம் 11, மதுக்கூர் 26, ஈச்சன் விடுதி 3, பேராவூரணி 7.

Next Story