புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அனுப்பி வைத்தார்.
குழித்துறை,
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பிலும் பல தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நிவாரண பொருட்கள்
இந்த நிலையில், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
அவ்வாறு சேகரிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிசி, துணி வகைகள், உணவு பொருட்கள் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோட்டில் உள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு மினிலாரியில் ஏற்றி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் தம்பி விஜயகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், திருவட்டார் மேற்கு வட்டார தலைவர் ஜெகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story