முன்விரோதத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு: அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில்


முன்விரோதத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு: அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 29 Nov 2018 10:10 PM GMT)

சொத்து பிரச்சினையில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற அண்ணன்- தம்பி உள்பட 4 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

மதுரை திருமங்கலத்தை அடுத்த எஸ்.மாயம்பட்டியை சேர்ந்தவர் குண்டுமணி என்ற ராஜேந்திரன். விவசாயி. இவருக்கும், உறவினர்களுக்கும் சொத்து பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இவருக்கும், உறவினர்களான ரகுராமன் (வயது 49), முத்துராமன் (46), தங்கராமன் (32), தினேஷ் (25) ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குண்டுமணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிந்துபட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. முடிவில், ரகுராமன், முத்துராமன், தங்கராமன், தினேஷ் ஆகிய 4 பேருக்கும் தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றவர்களில் தங்கராமனும், தினேசும் அண்ணன்-தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story