சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் ரூ.5.61 லட்சம் காணிக்கை


சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் ரூ.5.61 லட்சம் காணிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2018 10:30 PM GMT (Updated: 30 Nov 2018 6:38 PM GMT)

சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் ரூ.5.61 லட்சம் காணிக்கை செலுத்தியிருந்தனர்.

சேலம், 

சேலம் செரி ரோட்டில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். கோவிலில் 3 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. திருவிழா நேரங்களில் தற்காலிக உண்டியல்கள் வைக்கப்படும்.

இந்த கோவிலின் உண்டியல்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். இந்தநிலையில் நேற்று காலை கோவிலில் உள்ள 3 நிரந்தர உண்டியல்கள் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது. முன்னதாக சேலம் உதவி ஆணையர் உமாதேவி, ஆய்வாளர் கல்பனா தத், செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்த பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

இந்த பணிகள் மதியம் முடிவடைந்தது. அப்போது உண்டியல்களில் ரூ.5 லட்சத்து 61 ஆயிரத்து 113-யை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் அதில், 19 கிராம் தங்கமும், 62 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் இருந்தன.

Next Story