புயலால் பாதிக்கப்பட்ட மரங்களின் அடிப்படையில் நிவாரணம் கோரி உண்ணாவிரத போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
புயலால் பாதிக்கப்படட தென்னை மரங்களின் அடிப்படையில் நிவாரணம் வழங்கக்கோரி தென்னை விவசாயிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தஞ்சையில், பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
தஞ்சாவூர்,
கஜா புயல் காரணமாக 1 கோடி தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. முறிந்து விழுந்த, சாய்ந்த மரங்களை வெட்டி அகற்ற கூட மன வலிமை இல்லாமல் விவசாயிகள் உள்ளனர். எனவே பாதிப்படைந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மரங்களை அகற்றுவதற்காக உடனடியாக ராணுவ மீட்புக்குழுவினரை வரவழைக்க வேண்டும்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டேர் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
1 எக்டேருக்கு 175 மரங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். அதற்கு மேல் இருக்கக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களை இழந்த விவசாயிகள் மத்தியில் இந்த சுற்றறிக்கை விவகாரம் பெரும் வேதனையையும், அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உடனடியாக பிற மாநிலங்களில் இருந்து தென்னை மரக்கன்றுகளை வரவழைத்து இலவசமாக வினியோகம் செய்ய வேண்டும்.
குறுவை, சம்பா, சிறப்பு தொகுப்பு திட்டம் போல், தென்னையை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க இடுபொருட்கள், பராமரிப்பு செலவு வழங்க வேண்டும். மாவட்டங்களில் எங்கெல்லாம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தென்னை மரங்களை நம்பியிருந்த விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முதல்கட்டமாக பட்டுக்கோட்டையில் 4-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) தென்னை விவசாயிகளை ஒன்றுதிரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். அதன் பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story