பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர்கள் பங்கேற்பு


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 10:30 PM GMT (Updated: 1 Dec 2018 9:12 PM GMT)

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2019 பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் சுற்றுலா மாளிகையில் நேற்று நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2019 பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் சுற்றுலா மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் டாக்டர் சந்தோஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), விஜயலட்சுமி (அரியலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களையும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்காக கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2019-க்கான சிறப்பு முகாம் மற்றும் இதர வேலை நாட்களில் நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஸ்வநாதன் (பெரம்பலூர்), சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்) மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தாசில்தார்களும் கலந்து கொண்டனர்.


Next Story