கால்நடை மருத்துவ படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவேண்டும்; கால்நடை மருத்துவ பேரவை பதிவாளர் தகவல்


கால்நடை மருத்துவ படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவேண்டும்; கால்நடை மருத்துவ பேரவை பதிவாளர் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:56 AM IST (Updated: 2 Dec 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை மருத்துவ படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று கால்நடை மருத்துவ பேரவை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி கால்நடை மருத்துவ பேரவை பதிவாளர் டாக்டர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்திய கால்நடை மருத்துவ பேரவையின் மூலம் வருகிற 2019–20 கல்வி ஆண்டிற்கு இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள (ஜம்மு–காஷ்மீர் நீங்கலாக) அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீத (அகில இந்திய ஒதுக்கீட்டில்) கல்நடை மருத்துவ இளங்கலை பட்டப்படிப்பிற்கான (பி.வி.எஸ்.சி.) இடங்களுக்கு நீட் தேர்வின் மதிப்பெண் தரவரிசையினை பயன்படுத்தியே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.

கால்நடை இளநிலை பட்டப்பிரிவில் சேர்வதற்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க இதர தகுதிகள் அனைத்தும் இந்திய கால்நடை மருத்துவ பேரவையின் குறைந்தபட்ச கால்நடை மருத்துவ கல்விக்கான 2016–ம் ஆண்டு விதிகளை பின்பற்றியே இருக்கும்.

எனவே இந்த ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள 15 சதவீத கால்நடை மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் மத்திய அரசு 5–5–2019 அன்று நடத்த உள்ள நீட் தேர்வினை எழுதி எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டாக்டர் செந்தில்குமார் கூறியுள்ளார்.


Next Story