குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை


குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த மீனவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவொற்றியூர்,

எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). மீனவரான இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுரேசிடம், அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்தார். இதனால் குடிபோதையில் இருந்த சுரேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் தேசப் பன் (38). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். தேசப்பனுக்கு, குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அவர் சம்பாதித்த பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் முழுவதையும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

இதனால் அவருடைய மனைவி தீபா, நமக்கு 4 மகள்கள் உள்ளனர். இப்படி சம்பாதித்த பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் குடித்துவிட்டு வருகிறாயே? என கணவரை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த தேசப்பன், வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார்.

இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேசப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் எண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story