புதிதாக தேர்வு செய்யப்பட்ட 234 போலீசாருக்கு பயிற்சி தஞ்சையில் இன்று தொடங்குகிறது


புதிதாக தேர்வு செய்யப்பட்ட 234 போலீசாருக்கு பயிற்சி தஞ்சையில் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 Dec 2018 4:15 AM IST (Updated: 3 Dec 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 234 போலீசாருக்கு தஞ்சையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் 2-ம் நிலை போலீசாருக்கான தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் எடை, மார்பு அளவு சரிபார்ப்பு, கயிறு ஏறுதல், ஒட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடைபெற்றது.

இதில் தேர்வு பெற்றவர்களுக்கு பயிற்சிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதன்படி புதுக்கோட்டை, கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தேர்வு பெற்ற 234 பேருக்கு தஞ்சையில் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சிகள் 7 மாதம் வரை நடைபெறுகிறது.

234 பேருக்கு பயிற்சி

இதையடுத்து தேர்வு பெற்ற 234 பேரிடமும், அசல் சான்றிதழ்களை நேற்று சரிபார்த்து, அவர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களிடம் சான்றிதழ்களை ஒப்பிட்டு பார்த்து அவர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை பயிற்சியை தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

Next Story