ரூ.76 கோடி ஜி.எஸ்.டி. மோசடி: தொழில் அதிபர்கள் 2 பேர் கைது
ரூ.76 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சைலேந்திர ஜெயந்திலால். இவரது ஜி.எஸ்.டி. விவரங்களை சமீபத்தில் ஜி.எஸ்.டி. மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, தொழில் அதிபர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.76 கோடி அளவில் ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொழில் அதிபர் சைலேந்திர ஜெயந்திலாலை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்த பயந்தரை சேர்ந்த தொழில் அதிபர் ராகேஷ் என்ற லக்கானையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story