போதிய மழை பெய்யாததால் திருவாடானை தாலுகாவில் நெல் விவசாயம் பாதிப்பு; விவசாயிகள் கவலை


போதிய மழை பெய்யாததால் திருவாடானை தாலுகாவில் நெல் விவசாயம் பாதிப்பு; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 3 Dec 2018 4:18 AM IST (Updated: 3 Dec 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் போதிய மழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரத்து 547 எக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றுஉள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதுபோல் இந்த ஆண்டும் பருவமழை சரிவர பெய்யவில்லை. அவ்வப்போது பெய்த சிறுசிறு மழையை நம்பி விவசாயிகள் காலதாமதமாக நெல் விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் இதுவரை போதிய மழை பெய்யாததால் இந்த தாலுகாவில் நெல் விவசாயம் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.

பெரும்பாலான கிராமங்களில் மருந்துகளை தெளித்து விட்டு களை எடுக்கும் பணிகள் முடிவுற்ற நேரத்தில் அடுத்த கட்டமாக உரம் போடுவதற்கு விவசாயிகள் தயங்குகின்றனர். கஜா புயலால் நல்ல மழை பெய்யும் விவசாய பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என நம்பியிருந்தவர்களின் கனவும் நிறைவேறவில்லை. இதனால் தற்போது செய்வதறியாது திகைத்து போய் நிற்கின்றனர்.

கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் நெல் விவசாயம் பாதிக்குமோ, மழை வஞ்சித்து விடுமோ என்ற பெரும் கவலை விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. சங்கிலி தொடர்போல கண்மாய்கள் இத்தாலுகாவில் உள்ளன. தற்போது அனைத்து கண்மாய்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. இனிமேல் மழை பெய்தாலும் பயனில்லை என்ற நிலையில் தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வமில்லாமல் உள்ளனர்.


Next Story