கருக்கலைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு வரை கடுமையான தண்டனை விதிக்கப்படும் மாவட்ட முதன்மை நீதிபதி எச்சரிக்கை


கருக்கலைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு வரை கடுமையான தண்டனை விதிக்கப்படும் மாவட்ட முதன்மை நீதிபதி எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2018 4:15 AM IST (Updated: 3 Dec 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

கருக்கலைப்பு போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் 10 ஆண்டு வரை கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கருவிலேயே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு, பெண் சிசு கொலை பரவலாக நடைபெற்று வருகிறது. அத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் போலி டாக்டர்கள் மற்றும் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்வு காணப்பட உள்ளது. இது தொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், மலை கிராமங்களிலும் கூட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருக்கலைப்பு செய்வதை மாவட்டத்தில் இருந்து முழுமையாக அகற்ற மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், 2 அல்லது 3 முறை தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையும் கடுமையான தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மாவட்ட நிர்வாகத்திலும் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து அவற்றை மொத்தமாக அகற்றும் பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story