கும்பகோணத்தில் கடப்பாரையால் அடித்து பெண் கொலை குடிபோதையில் கணவர் வெறிச்செயல்


கும்பகோணத்தில் கடப்பாரையால் அடித்து பெண் கொலை குடிபோதையில் கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 4 Dec 2018 3:45 AM IST (Updated: 4 Dec 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில், குடிபோதையில் பெண்ணை கடப்பாரையால் அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஏராகரம் தட்டுமால் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணையன் மகன் சுப்பிரமணியன்(வயது 55). கூலி தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி(45) என்ற மனைவியும், இரண்டாம் வகுப்பு படிக்கும் சாட்சி நாதன்(7) மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சட்டைநாதன்(6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுப்பிரமணியனுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் சுப்பிரமணியன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுப்பிரமணியன், தனது மனைவி ஜெயந்தியை அடித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் அருகில் இருந்த கடப்பாரையை எடுத்து ஜெயந்தியின் தலையில் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story