சேலத்தை சேர்ந்தவர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்


சேலத்தை சேர்ந்தவர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:30 PM GMT (Updated: 3 Dec 2018 8:18 PM GMT)

மோட்டார் சைக்கிளை பயன்படுத்தாமல் சைக்கிளில் சென்று, பெட்ரோலை சேமித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என்பதனை வலியுறுத்தியும், சாதனைக்காகவும் நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பெரம்பலூர்,

சேலத்தை சேர்ந்தவர் ராசேராஜன்(வயது 48). இவர் நாம் இருப்பிடத்திற்கு சிறிது தூரமுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளை பயன்படுத்தாமல் சைக்கிளில் சென்று, பெட்ரோலை சேமித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என்பதனை வலியுறுத்தியும், சாதனைக்காகவும் நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார். 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் நோக்கத்தில் விழிப்புணர்வு பயணத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி சேலத்தில் தொடங்கினார். தொடர்ந்து ஆந்திரா, மராட்டியம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு தனது சைக்கிளேயே பயணம் மேற்கொண்ட இவர் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்திசிலைக்கு வந்தடைந்தார். அவரை பொதுமக்கள் வரவேற்றனர். விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் இடங்களில் சைக்கிளை பயன்படுத்துவதால், உடல் நலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையேயும், மாணவ-மாணவிகளிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தற்போது 20 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து விட்டேன். இன்னும் பல்வேறு வெளி மாநிலங்களுக்கு சைக்கிளிலேயே சென்று, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேலத்தில் விழிப்புணர்வு பயணத்தை முடித்து கொள்ள இருப்பதாக ராசேராஜன் தெரிவித்தார். இதையடுத்து அவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வழியாக அரியலூர் செல்வதற்காக புறப்பட்டு சென்றார். 

Next Story