பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சிவக்குமார சுவாமி மடத்திற்கு திரும்பினார்


பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சிவக்குமார சுவாமி மடத்திற்கு திரும்பினார்
x
தினத்தந்தி 4 Dec 2018 4:05 AM IST (Updated: 4 Dec 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சிவக்குமார சுவாமி மடத்திற்கு திரும்பினார்.

பெங்களூரு,

துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு 111 வயதாகிறது. அவர் கர்நாடகத்தின் ‘நடமாடும் கடவுள்’ என்றே மக்களால் போற்றப்படுகிறார். அவருக்கு பித்தநாளத்தில் ஏற்கனவே 8 ‘ஸ்டென்ட்’ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மடாதிபதி சிவக்குமார சுவாமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏற்கனவே ெபாருத்தப்பட்டுள்ள ‘ஸ்டென்ட்’ கருவிகளில், 2 கருவிகள் செயல் இழந்தது தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர்கள் குழு, நேற்று முன்தினம் அவருக்கு அந்த 2 கருவிகளை அகற்றிவிட்டு, புதிதாக 2 ‘ஸ்டென்ட்’ கருவிகளை வெற்றிகரமாக ெபாருத்தினர். இதையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினமே மடத்திற்கு செல்ல விரும்புவதாக மடாதிபதி கூறினார். ஆனால் மருத்துவமனையில் வைத்து அவரது உடல்நிைலயை டாக்டர்கள் கண்காணித்தனர்.

அவர் இயல்பான நிைலக்கு திரும்பினார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்ததை தொடர்ந்து சிவக்குமார சுவாமி நேற்று அந்த மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சித்தகங்கா மடத்திற்கு திரும்பினார். அவரை டாக்டர்கள் வழியனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது, அங்கு ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர்.

Next Story