கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்த திட்டம் மந்திரி ஜெயமாலா பேச்சு


கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்த திட்டம் மந்திரி ஜெயமாலா பேச்சு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:10 AM IST (Updated: 4 Dec 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி ஜெயமாலா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் துறை மந்திரி ஜெயமாலா பேசியதாவது:-

கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் இந்த கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதற்கு முதல்-மந்திரி குமாரசாமி அனுமதி வழங்க வேண்டும்.

தற்போது 7 வகையான மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு உதவி செய்கிறது. ஆனால் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். அவர்களையும் சட்டத்திற்குள் கொண்டு வந்து, அரசின் உதவிகளை செய்ய வேண்டும்.

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, அமல்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் ெதாடர்ந்து அமல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஜெயமாலா பேசினார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக சேவையாற்றும் அமைப்புகள், மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு முதல்-மந்திரி குமாரசாமி விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடினார்.

Next Story