நாகர்கோவிலில் பி‌ஷப் ஹவுஸ் முன் பொதுமக்கள் போராட்டம்


நாகர்கோவிலில் பி‌ஷப் ஹவுஸ் முன் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2018 10:45 PM GMT (Updated: 4 Dec 2018 2:54 PM GMT)

குமரி மாவட்டம் பள்ளம் அன்னைநகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் செல்லும் ரோட்டில் உள்ள பி‌ஷப் ஹவுஸ் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பள்ளம் அன்னைநகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் செல்லும் ரோட்டில் உள்ள பி‌ஷப் ஹவுஸ் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டபோது கூறியதாவது:– எங்கள் ஊரில் அற்புத அன்னை ஆலயம் உள்ளது. எங்கள் ஊருக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், நகைகள் அனைத்தும் ஆலயத்தில் உள்ள மேடையில் பாதுகாப்பாக வைப்பது வழக்கம். ஆனால் எங்கள் ஊருக்கு பங்குத்தந்தை கிடையாது. பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு பங்குத்தந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் இங்கு வந்து பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவார். இந்த நிலையில் ஊருக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை அந்த பங்குத்தந்தை எடுத்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து ஆயரை பார்த்து முறையிட்டோம். தற்போது ஆயரை பார்க்க வந்த எங்களை பி‌ஷப் ஹவுசுக்குள் விட போலீசார் மறுக்கிறார்கள். எங்கள் ஊர் சொத்துக்களை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி‌ஷப் ஹவுசுக்குள் பொதுமக்களை போலீசார் விட மறுத்ததால் அவர்கள் வாசலில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கேயே காத்திருந்து கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.

Next Story