புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடின்றி நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் ஜான்பாண்டியன் வலியுறுத்தல்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடின்றி நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என ஜான்பாண்டியன் கூறினார்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நிவாரண பொருட்களை வழங்கி, ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டதட்ட ரூ.10 லட்சத்துக்கு மேலான பொருட்களை வழங்குவதற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நிவாரண பொருட்களை கொடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் 3 நாட்கள் தங்கி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு எங்களால் முடிந்த நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம்.
இந்த பகுதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டபோது பள்ளிகளை திறப்பதாக கூறி முகாம்களை காலி செய்ய சொல்வது தெரியவந்தது. இது வருத்தத்திற்கு உரியது ஆகும். முகாமில் இருந்து அவர்களை காலி செய்ய சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண பொருட்கள் கொடுக்கும் போது, வித்தியாசம் பார்க்காமல் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன்னதாக மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். அப்போது கஜா புயல் சம்பந்தமாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புயலால் பாதித்த மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்கள் குறித்து கூறினேன்.
கஜா புயலின் பாதிப்புகள் குறித்தும், மக்களின் குறைகளையும் கேட்டு மறுபடியும் முதல்-அமைச்சரை சந்தித்து நிலவரங்களை தெரிவிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ஒன்றிய செயலாளர் ஐயாஅம்பேத்கார், மண்டல செயலாளர் பாலைபட்டாபிராமன், திருவாருர் தெற்கு மாவட்ட செயலாளர் ரஜினிபாண்டியன், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் சிவராஜேந்திரன், மாநில செய்தி தொடர்பாளர் சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story