மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 5 Dec 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மேரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மேரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் எம்.பி. மருதராஜா, குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் சாந்தா, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், திருமண நிதி உதவிகள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள், காதொலி கருவிகள், சிறப்பு மடக்கு சக்கர நாற்காலிகள், பார்வையற்றோருக்கான கைக்கடிகாரங்கள், நவீன மடக்கு ஊன்றுகோல்கள் உள்பட 98 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி, வங்கி அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளின் சங்க பிரதிநிதிகள், அரசு சாரா தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story