அமராவதி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை


அமராவதி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2018 4:00 AM IST (Updated: 5 Dec 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கரூர்,

மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம், கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கி முருகேசன், மேற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், கரூர் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து கட்சியை பலப் படுத்த வேண்டும்.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரித்து பூத்கமிட்டி அமைக்க வேண்டும். காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்

அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா செய்யப்படுவதை கண் காணித்து தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் அய்யம்பாபு, கரூர் நகர செயலாளர் சங்கர் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story